உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
உத்தமபாளையம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் உத்தமபாளையம் விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் உத்தமபாளையம் விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பூர்விகா 500 க்கு 493 மதிப்பெண் பெற்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். யுவனேஷ் 485, முருகவேல் 479 பெற்று பள்ளி அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர். அறிவியல்,சமூக அறிவியலில் தலா ஒருவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். தேர்வு எழுதிய 82 பேர்களும் தேர்ச்சி பெற்றனர். 400 க்கு மேல் 26 பேரும், 450 க்கு மேல் 15 பேரும், 470 க்கு மேல் 6 பேர், 480 க்கு மேல் 2பேர், 490 க்கு மேல் ஒருவர் என மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். சாதனை மாணவ மாணவிகளை பள்ளி சேர்மன் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா ஆகியோர் பாராட்டினர்.