3 பேரூராட்சிகளில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்
தேனி: மாவட்டத்தில் 3 பேரூராட்சிகளில் புதிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் வீரபாண்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் இந்த பேரூராட்சிகளில் தலா ரூ. 45 லட்சம் செலவில் கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப பட்டுள்ளது என்றனர்.