உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க.,ஆண்டு விழா கொண்டாட்டம் 

அ.தி.மு.க.,ஆண்டு விழா கொண்டாட்டம் 

தேனி: தேனி- பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் அருகில் அ.தி.மு.க., துவக்க நாளை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு கட்சியினர் இனிப்பு வழங்கினர். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். விழாவில் துணை நகர செயலாளர் சுந்தரபாண்டியன், நகர மீனவரணி செயலாளர் பாண்டி, எம். ஜி. ஆர்., மன்ற இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ், மாணவரணி நிர்வாகி தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெரியகுளம்: பெரியகுளத்தில் அண்ணாத்துரை சிலை அருகே அ.தி.மு.க., நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது. நகர துணை செயலாளர் வெங்கடேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் சலீம், இலக்கிய அணி செயலாளர் தவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்னாள் எம்.பி., அலுவலம் முன் நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில் இனிப்பு வழங்கினர். கவுன்சிலர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் அன்பு, ராஜகோபால், ஜெயப்பிரகாஷ்,பாலசுந்தரம், ரெங்கராஜ், சந்தோஷம், ராஜவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி