உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்னை விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தென்னை விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தேனி: 'தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில், பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.' என, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.மாவட்டத்தில் 23,500 எக்டேர் பரப்பில் தென்னை சாகுபடியாகிறது. தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த தென்னை மரங்கள் இயற்கை சீற்றங்கள், பூச்சி, நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதன்படி 4 முதல் 15 ஆண்டுகளான தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு ரூ.2.25 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். மேலும் 16 வயதிற்கு மேற்பட்ட மரங்களுக்கு ரூ.3.50 பிரீமியமாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் ஆதார் நகல், சிட்டா, அடங்கல், நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இத்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை 86808 79084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ