உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 30 ஆண்டுகளுக்கு பின் ஜனவரியில் மழை ஏலத்தோட்டங்களில் கோடையை சமாளிக்க உதவும்

30 ஆண்டுகளுக்கு பின் ஜனவரியில் மழை ஏலத்தோட்டங்களில் கோடையை சமாளிக்க உதவும்

கம்பம் : 30 ஆண்டுகளுக்கு பின் டிசம்பர், ஜனவரியில் ஏலத்தோட்டங்களில் மழை பெய்தது வரும் கோடையை சமாளிக்க உதவும் என்று ஏல விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இடுக்கி மாவட்டத்தில் வண்டன் மேடு, சாஸ்தா நடை, மாலி, மாதவன்தான், மேப்பாறை , இஞ்சிப் பிடிப்பு, சங்குண்டான், ஆமையார், அன்னியார் தொழு, சுல்த்தானியா, வெங்கலப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஏலத் தோட்டங்களுக்கு மிதமான மழை தொடர்ந்து கிடைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் மழை கிடைக்கும். ஆனால் நவம்பருக்கு பின் மழை இருக்காது.குறிப்பாக டிசம்பர், ஜனவரியில் பனி , குளிர் அதிகமாக இருக்கும். மார்ச், ஏப்ரல், மே யில் தோட்ட கிணறுகளில் உள்ள தண்ணீரை பாய்ச்சுவர்கள். கோடையை சமாளிக்க முடியாமல் ஆண்டுதோறும் விவசாயிகள் திண்டாடுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு யாரும் எதிர்பாராதவிதமாக டிசம்பர், ஜனவரியில் நல்ல மழை பெய்தது. இதனால் ஏலத்தோட்டங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதன் காரணமாக வரும் கோடையில் தண்ணீர் பிரச்னை இருக்காது என்றும், கோடையை சமாளிக்க தற்போது பெய்துள்ள மழையே போதுமானது என்று தொழில்நுட்ப ஆலோசர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் ஏலத்தோட்டங்களில் டிசம்பர், ஜனவரியில் மழை பெய்யவில்லை என்றும், இதுவே முதன்முறை என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை