மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
31-Mar-2025
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருமண மண்டபத்தில் நடந்தது. ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க., கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், ஆண்டிபட்டி நகரம் சார்பில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மூலம் 9 பேர் கொண்ட பூத்கமிட்டி தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர செயலாளர் அருண்மதி கணேசன் முன்னிலை வகித்தனர். தேனி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ரதிமீனாசேகர், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.
31-Mar-2025