உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கட்டுப்பாட்டு அறையில் இருந்து பறக்கும்படைகள் கண்காணிப்பு

கட்டுப்பாட்டு அறையில் இருந்து பறக்கும்படைகள் கண்காணிப்பு

தேனி: தேனி லோக்சபா தொகுதியில் தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை செயல்பாடுகளை கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.லோக்சபா தேர்தலுக்காக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லுதல் இவற்றை கண்காணிக்க பறக்கும் படை, நிலைக்குழு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. தேனி தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு தலா 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் பயன்படுத்தும் கார்களில் ஜி.பி.எஸ்., கருவி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜி.பி.எஸ்., கருவியை கொண்டு அக்குழு எந்த இடத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளது, எங்கு பயணிக்கிறது என தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரை வழியாக கண்காணிக்கப்படுகிறது. கார் ஓரிடத்தில் அதிக நேரம் நின்றால் அதற்கான விளக்கம் கேட்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி