மேலும் செய்திகள்
'வாக்கத்தான்' போட்டி
27-Aug-2024
உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் ரத்தச் சோகை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.இக் கல்லூரியில் நடந்த ரத்தச் சோகை பற்றிய விழிப்புணர்வு முகாமிற்கு கல்லூரி முதல்வர் எச். முகமது மீரான் தலைமை வகித்தார். சித்தா டாக்டர் சிராசுதீன், ''ரத்தச்சோகை நோய் பிசரவ கால சிக்கல்களுக்கு முக்கிய காரணியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, கவனம் சிதறல், மூச்சு வாங்குவது, மயக்கம் அடைவது இதன் அறிகுறிகளாகும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக காலணி அணிவதன் மூலம் வயிற்றுப் புழுக்கள், நாடாப் புழுக்கள் தொற்றாமல் பாதுகாத்து கொள்ளலாம்.காபி, டீ தவிர்க்க வேண்டும். விட்டமின் சி, போலிக் ஆசிட் அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்தில் மாதுளை மண பாகு, நெல்லிக்காய் லேகியம், கரிசாலை லேசியம், கடுக்காய் மாத்திரைகள் அன்னபேதி செந்தூரம் மிக சிறந்தாகும். இவ்வாறு பேசினார்.இந்த நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் அனிதா, ரஷிதாபானு, ஜாகேதா பர்வீன், முகமது பஷீர், பிலால், பைஸ் அகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
27-Aug-2024