உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில், ' பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்க முகம் பதிவு செய்யும் முறையை கைவிட வேண்டும். அங்கன்வாடி மைய பணிகளை செய்ய 5ஜி அலைபேசிகள், மையங்களுக்கு வைபை இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் நாகலட்சுமி, மாவட்ட செயலாளர் வனிதா, மாவட்ட பொருளாளர் நாகலட்சுமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை