சிறை அதிகாரி மாமனாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கூடலுார்:திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையின் துணை கண்காணிப்பாளர் வசந்த்கண்ணன், 38. இதற்கு முன் மதுரை மத்திய சிறையில் பணியாற்றினார். அப்போது கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை அரசுத் துறைகளுக்கு இலவசமாக வழங்கியதில் ஊழல், முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கூடலுார் அருகே லோயர்கேம்ப் கடைவீதி தெருவில் உள்ள வசந்த்கண்ணனின் மாமனார் சிவா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். காலை 7:00 மணிக்கு துவங்கிய சோதனை மதியம் 3:00 மணி வரை நடந்தது.எட்டு மணி நேரம் தொடர்ந்து நடந்த ரெய்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சிறை அதிகாரி இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். அதனால் துணைக் கண்காணிப்பாளரின் மாமனார் வீட்டில் சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.