மேலும் செய்திகள்
ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
14-Dec-2025
தேனி: தேனி மாவட்ட ஊர்க்காவல்படையில் 45 ஆண்கள், ஒரு பெண் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப் பணியில் சேர 2025 டிச.31க்குள் 20 வயதுபூர்த்தியடைந்த 50 வயதுக்கு உட்பட்ட இருபாலர், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பு தோல்வி அடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தேனி எஸ்.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஐ.டி.ஐ., வளாக கட்டடத்தில் (அறை எண்:12ல்) இயங்கி வரும் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் பெற்று பூர்த்தி செய்து டிச.27 மாலை 5:00 மணிக்குள் வழங்க வேண்டும். தேர்வு செய்யும் தகுதியானவர்களுக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 56 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். அதன்பின் பணி அமர்த்தப்படுவர். மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் படித்தொகை ஊதியத்துடன் மாதந்தோறும் ரூ.2800 வழங்கப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி., சினேஹாபிரியா தெரிவித்துள்ளார்.
14-Dec-2025