உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி : குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உறுப்பினர் பணியிடத்திற்கு குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகபணி, சமூகவியல், மனிதநல மருத்துவம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பிப்பவர்கள் 35 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தை http://theni.nic.inஎன்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்து இயக்குனர், சமூக பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600 010 என்ற முகவரிக்கு மார்ச் 7, மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் உறுப்பினர் நியமனம் செய்யப்படுவார் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ