மேலும் செய்திகள்
10 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள்
05-Dec-2025
தேனி, டிச. 23- மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலராக கலெக்டர் உள்ளார். தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்களாக சப் கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் பணியின் போது உதவிட 5 தாசில்தார்கள், 6 நகராட்சி கமிஷனர்கள் கூடுதல் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் கூடுதல் வாக்காளர் பதிவு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தாலுகா அலுவலகங்களில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் 5 பேர் கூடுதல் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
05-Dec-2025