உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட ஏற்பாடு

ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட ஏற்பாடு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.5.90 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. 19 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். ஊராட்சி ஒன்றியத்திற்கான அலுவலக கட்டிடம் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடம் தற்போதுள்ள நிர்வாகத்திற்கு போதுமானதாக இல்லை. இதனைத் தொடர்ந்து புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அரசிற்கு வலியுறுத்தப்பட்டது. தற்போது 'தமிழக அரசின் ஒதுக்கப்பட்ட வருவாயின் திட்ட பணி' திட்டத்தில் ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கட்டிடங்களை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்டுமானத்திற்கான மண் பரிசோதனை தற்போதுள்ள அலுவலக வளாகத்தில் நடந்தது. அதிகாரிகள் கூறியதாவது: தற்போதுள்ள கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதிய அலுவலக கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிக அலுவலகத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை