கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு
தேனி: மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகிறது.மையங்கள் 9 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 9 வட்டாரத்திலும் தலா 100 கர்ப்பிணி பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.இம்மாதத்தில் வளைகாப்பு 9 இடங்களில் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.