உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் கலை பண்பாட்டு விழா

கல்லுாரியில் கலை பண்பாட்டு விழா

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் 'வேவ்ஸ் 25' கலை, பண்பாட்டு துவக்க விழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன், கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, நடனம், கோலம், வெஜிடபிள் கார்விங், கிளே மாடலிங் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. நிறைவு விழாவில் சினிமா நகைச்சுவை நடிகர் மதுரைமுத்து, பேச்சாளர் அன்னபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் தலைமையில் துணைமுதல்வர்கள், பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை