மேலும் செய்திகள்
கேரளாவில் பறவை காய்ச்சல்
28-Dec-2025
டாக்டர் பழனியப்பன் நினைவு விருது வழங்கும் விழா
28-Dec-2025
படிக்கட்டை இடித்த 7 பேர் மீது வழக்கு
28-Dec-2025
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
28-Dec-2025
கம்பம், காமயகவுண்டன்பட்டியில் மீண்டும் கல்குவாரிகள் திறக்க அனுமதிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்குவாரிகள் செயல்பட்டன. விவசாயிகள் எதிர்ப்பு, வனத்துறை கெடுபிடி காரணமாக கல்குவாரிகள் மூடப்பட்டது. தற்போது மீண்டும் கல்குவாரிகள் நடத்த அனுமதிக்க அரசு முன் வந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எனபல தரப்பினரின் கருத்துக்களை - கேட்கும் கூட்டம் காமயகவுண்டன்பட்டியில் நடைபெற்றது.இதில் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவு செய்தனர். பேசிய கலெக்டர் ஷஜீவனா, கல்குவாரிகள் அனுமதிப்பதால் நீர், நிலம், காற்று, ஒலி, ஒளி போன்றவற்றில் ஏற்படும் மாசு தொடர்பாக விரிவாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. 13.5 எக்டேர் பரப்பில் கல்குவாரிகள் நடத்த அனுமதிக்கப்பட உள்ளது. இங்கு பேசியவர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீர ஆலோசித்து அனுமதி வழங்கப்படும். விதிமீறல்கள் இருந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்றார்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025