உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சட்டசபை பொது நிறுவனங்கள் குழு மாவட்டத்தில் ஆய்வு

சட்டசபை பொது நிறுவனங்கள் குழு மாவட்டத்தில் ஆய்வு

தேனி: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.சட்டசபை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமையிலான குழுவினர் மாவட்டத்திற்கு நேற்று ஆய்விற்கு வந்திருந்தனர். இந்த குழுவினர் ஆண்டிபட்டி துணை மின் நிலையம், ஜெயமங்கலம் டாடா காபி துாள் தயாரிப்பு நிறுவனம், முத்துத்தேவன்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரிய சமுதாய கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தேனியில் நலம் மருத்துவமனையில் ஆய்வு செய்த குழுவினரிடம் மருத்துவக்கழிவுகள் கையாளப்படும் விதம், அப்புறப்படுத்தப்படும் விதம் பற்றி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார்விளக்கினார். ஆய்வுக்குழுவின் உறுப்பினர்கள் கடம்பூர் ராஜு, மயிலாடுதுறை வேலு, சட்டசபை செயலாளர் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் பங்கேற்றனர். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !