உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை முயற்சி வழக்கு: தந்தை, மகனுக்கு சிறை

கொலை முயற்சி வழக்கு: தந்தை, மகனுக்கு சிறை

தேனி: தோட்டத்தில் மாடு கட்டியவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த கடமலைக்குண்டு முத்தாலம்பாறை காளியம்மன் கோயில் தெரு பிரெஞ்ச்செல்வத்துக்கு,பத்தாண்டுகள் சிறையும், உடந்தையாக இருந்த அவரது மகன் ஆஷ்காருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முத்தாலம்பாறை கண்மணிராஜா 37,விற்கும் அப்பகுதியை சேர்ந்த சின்னச்சாமி குடும்பத்தினருக்கும், நிலப்பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. 2022 அக்.17ல், தனது காட்டில் கண்மணிராஜா ஆடு, மாடுகளை கட்டிக் கொண்டிருந்தார். அங்கு வந்த சின்னச்சாமி,மனைவி சரஸ்வதி, மகன் பிரெஞ்ச்செல்வம், அவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் ஆஷ்கார், அபிஷேக், உறவினர் சர்மா உட்பட ஏழு பேர் கண்மணி ராஜாவை தாக்கினர். பிரெஞ்ச் செல்வம் கத்தியால் குத்தி காயப்படுத்தினார். காயமடைந்து தேனி மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.இதில் ஏழு பேர் மீதுகடமலைக்குண்டு போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அரசு வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜரானார். நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி பிரெஞ்ச் செல்வத்துக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த அவரது மகன்ஆஷ்காருக்கு ஒருமாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி