உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோழி பிடிப்பதில் தகராறு ஆட்டோ டிரைவர் கொலை

கோழி பிடிப்பதில் தகராறு ஆட்டோ டிரைவர் கொலை

தேனி:தேனியில் வீட்டில் வளர்த்த கோழியைப் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் முத்தையாவை 48, கத்தியால் குத்திக் கொலை செய்த உறவினர் நவீன்குமாரை 25, போலீசார் கைது செய்தனர். தேனி விஸ்வதாஸ்நகரைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு உதவியாக உறவினர் அனுமந்தம்பட்டி நவீன்குமார் இருந்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பாண்டி இறந்தார். இவரது 16ம் நாள் காரியம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் ஆட்டோ டிரைவர் முத்தையா 48, பேரன்கள் முத்துமாணிக்கம், முத்துப்பாண்டி மற்றும் நவீன்குமார் செய்து வந்தனர். நேற்று அதிகாலை பாண்டி வளர்த்த கோழிகளை முத்துப்பாண்டி பி டித்தார். இதில் முத்துப்பாண்டிக்கும் நவீன்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறை முத்தையா, உறவினர் மீனாட்சி உள்ளிட்டோர் தடுக்க முயன்றனர். அப்போது நவீன்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்தையாவின் நெஞ்சில் குத்திவிட்டு தப்பிச் சென்றார். முத்தையாவை கார் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் முத்தையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்தையாவின் மனைவி முத்துராணி புகாரில் நவீன்குமாரை தேனி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை