உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் கடனை செலுத்தாதவர் வீட்டில் பீரோ, கட்டில் ஜப்தி

கார் கடனை செலுத்தாதவர் வீட்டில் பீரோ, கட்டில் ஜப்தி

பெரியகுளம்: தனியார் நிதி நிறுவனத்திற்கு கார் அடமானம் கடன் செலுத்தாததால் சார்பு- நீதிமன்றம் உத்தரவில் வீட்டிலுள்ள அசையும் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.பெரியகுளம் வடகரை வடக்கு பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார். இவர் தென்கரை ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் 2008ல் கார் அடமான கடன் பெற்றார். கடன் செலுத்தாததால் நிதி நிறுவனம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார். நீதிபதி சுந்தரி, கடன் தொகை செலுத்தாத விஜயகுமார் வீட்டில் அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து நீதிமன்றம் பணியாளர்கள் ரமேஷ், ஜென்சி மாலதி மேற்பார்வையில் போலீசார்கள் வீட்டில் இருந்த டி.வி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களை வெளியில் கொண்டு வந்தனர். நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.35 லட்சத்திற்கு விஜயகுமார் குடும்பத்தினர் ரூ.35 ஆயிரம் செலுத்தியதால் நீதிமன்றம் பணியாளர்கள் ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை