உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெயரளவில் நடந்த மனித, -வன உயிரின மோதல் விழிப்புணர்வு

பெயரளவில் நடந்த மனித, -வன உயிரின மோதல் விழிப்புணர்வு

கூடலுார், : லோயர்கேம்பில் வனத்துறை சார்பில் மனித வன உயிரின மோதல் பற்றிய விழிப்புணர்வு முகாம் பெயரளவில் நடந்தது.கம்பம் மேற்கு வனச்சரகம் சார்பில் லோயர்கேம்பில் மனித வன உயிரின மோதல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாம் நடப்பது தொடர்பாக முன்கூட்டியே எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. இதனால் லோயர்கேம்பில் உள்ள பொதுமக்களே முகாமில் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில விவசாயிகளை மட்டும் அழைத்து முகாமை நடத்தினர். வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடனம், கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்த போதிலும் அதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும்தான் மக்கள் அதிகம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்