உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீலகிரி வரையாடு பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு

நீலகிரி வரையாடு பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு

கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி பசுமை இயக்ககம் சார்பில் 'நீலகிரி வரையாடு பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.இணைச்செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ரேணுகா வரவேற்றார். பல்லுயிர்பெருக்கம், தாவர இனம், விலங்கு இனம், மரங்களின் முக்கியத்துவம், வரையாடுகளை காப்பாற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டது.நீலகிரி வரையாடு காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம், தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் மற்றும் காடுகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை திட்ட தலைவர் லதா மதிவேந்தரின் குழு சார்பாக வரையாடுகளின் சிறப்பை நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கம்பம், கூடலுார் ரேஞ்சர்கள், கல்லுாரி விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை