உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐயப்ப பக்தர்கள் வாகனம் மோதி ஒருவர் பலி

ஐயப்ப பக்தர்கள் வாகனம் மோதி ஒருவர் பலி

கூடலுார் : கூடலுார் அருகே லோயர்கேம்பில் ஐயப்ப பக்தர்களின் வாகனம் மோதி வண்டிப்பெரியாறைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.கேரளா வண்டிப்பெரியாறு கிராம்பி எஸ்டேட்டை சேர்ந்தவர் அந்தோணிராஜ் 45. அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் 39. இருவரும் டூவீலரில் கூடலுாரில் இருந்து குமுளி நோக்கி சென்ற போது லோயர்கேம்பில், சபரிமலையில் இருந்து தரிசனம் முடித்து திரும்பிய வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்தோணிராஜ் பலியானார். வினோத்குமார் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த வாகன டிரைவர் திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து லோயர்கேம்ப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. இந்த வாகனங்கள் மோதி எதிரே வருபவர்கள் பலியாவது தொடர்ந்துள்ளது. இதனால் சபரிமலைக்கு செல்லும் வாகன டிரைவர்களுக்கு கட்டாய ஆலோசனை வழங்குவதுடன் விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ