மேலும் செய்திகள்
சின்னச்சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை
09-Nov-2024
கடமலைக்குண்டு : மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் அடுத்தடுத்து பெய்த மழையால் மேகமலை சின்னச்சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் அருவியில் குளிக்க வனத்துறையினர் விதித்த தடை இன்னும் தொடர்கிறது. கடமலைக்குண்டு கோம்பைத்தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சின்னச்சுருளி அருவி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். சில நாட்களாக மலைப்பகுதியில் அடுத்தடுத்து பெய்யும் மழையால் சின்னச் சுருளி அருவியில் நீர் வரத்து அடிக்கடி உயர்ந்து குறைகிறது. இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதிக்கு சென்று வர கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்படவில்லை. வனத்துறையினர் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கான சூழல் நீடிக்கிறது. அருவியில் நீர்வரத்து அதிகரித்தால் பாறைகள், கற்கள் நீரில் அடித்து வரும் வாய்ப்புள்ளது. இதனால் குளிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடர்கிறது இவ்வாறு தெரிவித்தனர்.
09-Nov-2024