மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
03-Aug-2025
பெரியகுளம் : பெரியகுளத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம், தலைவர் காமராஜ் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு துணைத்தலைவர் ஜெயராமன், இணைச்செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுதாகரன் வரவேற்றார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசினார். மூத்த வழக்கறிஞர்கள் கவுரவிக்கப் பட்டனர். மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். சேம நலதிதியை ரூ.10 லட்சத்திலிருந்து உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உட்பட 5 கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.-
03-Aug-2025