உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு

பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு

பெரியகுளம்: பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாதசாமி கோயிலின் உபகோயிலான பகவதியம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக்கோயிலில் மாசி திருவிழா மார்ச் 10 முதல் நேற்று (மார்ச் 19) வரை பத்து நாட்கள் நடந்தது. நேற்று முக்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், காவடி எடுத்தும், பகவதியம்மன், மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன், மீனாட்சியம்மன் உட்பட அம்மன், சுவாமி அலங்காரமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மார்ச் 25ல் மறுபூஜை நடக்கிறது. --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை