உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பராயப் பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை

கம்பராயப் பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை

கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் ரூ.3.75 கோடியில் திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் ஒரு பகுதி நீண்ட காலமாக பஸ்ஸ்டாண்டாக செயல்பட்டது. நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடத்தை சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்து சமய அறநிலையத்துறை திரும்ப பெற்றுக் கொண்டது. அந்த இடத்தில் கோயில் சார்பில் திருமண மண்டபம் கட்ட பொதுமக்கள் அரசிற்கு - கோரிக்கை வைத்தனர்.எம்.எல். ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியில் கோயில் வளாகத்தில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்ட அரசு அனுமதி வழங்கியது. நேற்று திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன கட்டுமான பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், பண்ணைப்புரம் மல்லிங்கேஸ்வரர் கோயில், க.புதுப்பட்டி நீலகண்டேஸ்வரர் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில்களின் சுற்றுச்சுவர் கட்ட ரூ.66 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் திருமண மண்டபம் கட்ட ரூ.4.75 கோடியும், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் திருமண மண்டபம் கட்ட ரூ.4.14 கோடியும் அனுமதி பெறப்பட்டுள்ளது. உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளும் நடந்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பாஸ்கர், பால முத்தழகு குழும சேர்மன் ஜெகநாத் மிஸ்ரா, நகராட்சி தலைவர் வனிதா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், வர்த்தக சங்க தலைவர் முருகன், தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் பாண்டி, நகர் தி.மு.க., செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் அருணா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை