உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., தேர்தல் ஆலோசனை கூட்டம்

பா.ஜ., தேர்தல் ஆலோசனை கூட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் பா.ஜ., சார்பில் சட்டசபை தொகுதி தேர்தல் பணி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பாப்பம்மாள்புரம் முத்தையா சுவாமி கோயிலில் பா.ஜ., நகர் தலைவர் மனோஜ் குமார் தலைமையில் நடந்தது. தெற்கு ஒன்றிய தலைவர் கார்த்திக், வடக்கு ஒன்றிய பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி பார்வையாளர் பாலு, தொகுதி அமைப்பாளர் லிங்கப்பன், இணை அமைப்பாளர் குமார் ஆகியோர் பேசினர். பா.ஜ., பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, முக்கிய நபர்களை சந்திப்பது, பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்தும், பயன்கள் குறித்தும் கிளைகளில் பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமன், மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி