பா.ஜ., ஆர்ப்பாட்டம்: 66 பேர் கைது
தேனி: பீஹார் மாநிலத்தில் காங்., எம்.பி., ராகுல் உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் மேடை ஏறி பிரதமர் மோடியின் தாயார் பற்றி தவறாக பேசினர். மேடையில் தவறாக பேசியவர்களையும், எம்.பி., ராகுல், இண்டி கூட்டணியினரை கண்டித்து தேனி நேருசிலை அருகே பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரதலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசார் பா.ஜ.,வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராகுல் புகைப்படத்தை கிழித்தனர். 11 பெண்கள் உட்பட 66 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் போலீசார் அடைத்தனர்.