உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., ஆர்ப்பாட்டம்...

பா.ஜ., ஆர்ப்பாட்டம்...

தேனி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ., மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தேசிய குழு உறுப்பினர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள், பாகிஸ்தான் அரசை கண்டித்தும், தமிழகத்தில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டறிந்து வெளியே அனுப்ப வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து பாகிஸ்தான் தேசிய கொடியை கிழித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் பாண்டியன், வெங்கடேசன், மாவட்டச் செயலாளர்கள் மலைச்சாமி, அஜித்இளங்கோ, தேனி நகரத் தலைவர் ரவிக்குமார், மகளிரணி நிர்வாகிகள் முத்துமணி, கவிதா, சித்ரா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி டி.ஆர்.ஓ., மகாலட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ