உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மீறு சமுத்திர கண்மாயில் ரூ.7.40 கோடியில் படகு குழாம், பூங்கா

 மீறு சமுத்திர கண்மாயில் ரூ.7.40 கோடியில் படகு குழாம், பூங்கா

தேனி: தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி செலவில் நடைபயிற்சி பாதை, பறவைகள் தீவு, படகு குழாம், சிறுவர் பூங்கா, கரையில் இரும்பு வேலிஅமைத்தல் வளர்ச்சி பணிகளுக்கு தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் துவக்கி வைத்தார். இக்கண்மாய் 106 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 90 ஏக்கர் நீர்த்தேக்க பகுதியாக உள்ளது. கண்மாய் கிழக்கு, தெற்கு பகுதி கரைகளை பலப்படுத்தி 2000 மீட்டர் துாரத்தில் இருபக்கமும் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு நடைப்பயிற்சிக்கான பாதை அமைக்கப்பட உள்ளது. மேலும் லேக் வியூ ரோட்டில் மரங்கள் அடங்கிய பூங்கா, சிறுவர் பூங்கா, கண்மாயின் மையப்பகுதியில் பறவைகள் தீவு, சிசிடிவி, படகுகள் குழாம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. இப் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் பணிகளை நேற்று துவக்கினர். இப் பணிகள் ஆறு மாதங்களில் முடிந்து நடைமுறைக்கு வரும் எனநீர்வளத்துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார்,நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, திட்டக்குழு உறுப்பினர் நாராயணபாண்டியன், மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சாலமன்கிறிஸ்துதாஸ், உதவிப் பொறியாளர் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை