உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குண்டளை அணையில் மூதாட்டி உடல் மீட்பு

குண்டளை அணையில் மூதாட்டி உடல் மீட்பு

மூணாறு : மூணாறு அருகே செண்டுவாரை எஸ்டேட், லோயர் டிவிஷனில் இருந்து மாயமான மூதாட்டி சுசீலாவின் 76, உடல் குண்டளை அணையில் இருந்து மீட்கப்பட்டது. கணவர் இறந்த பிறகு சுசீலா மகள் சுகந்தி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர் செப்.,30ல் மதியம் வீட்டில் இருந்து மாயமானார். மூணாறு போலீசில் சுகந்தி புகார் அளித்தார். மாயமான சுசீலாவை உறவினர்கள் தேடி வந்த நிலையில், அவரது உடல் குண்டளை அணை நீர் தேக்கத்தின் ஒரு பகுதியான செண்டு வாரை சூப்பர் பாக்டரி அருகே இறைச்சல்பாறை பகுதியில் கிடந்ததை நேற்று முன்தினம் மாலை பார்த்தனர். மூணாறு தீயணைப்பு துறையினர் சுசீலாவின் உடலை மீட்டனர். அவர் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை