மேலும் செய்திகள்
ஆண் சடலம் மீட்பு
27-Mar-2025
போடி : போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன் 64. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் பாபு 40. இவர் ஆக்டிங் டிரைவர் வேலை செய்தார். இவருக்கு மது பழக்கம் அதிக அளவில் இருந்துள்ளது. 7 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பாபு வேலைக்கு சென்று இருக்கலாம் என பெற்றோர்கள் நினைத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மேலச்சொக்கநாதபுரம் கழிவுநீர் ஓடையில் குடி போதையில் பாபு இறந்து கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துஉள்ளது. தந்தை ஜெயராமன் புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
27-Mar-2025