உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பள்ளியில் வாட்ச்மேன் உதவியுடன் புத்தகங்கள் திருட்டு

அரசு பள்ளியில் வாட்ச்மேன் உதவியுடன் புத்தகங்கள் திருட்டு

தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இரவில் தற்காலிக வாட்ச்மேன் மாரிமுத்து உதவியுடன் பண்டல் பண்டலாக புத்தகங்கள் திருடுபோனது. தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் இங்குள்ள தற்காலிக வாட்ச்மேன் மாரிமுத்து உதவியுடன் மாணவர்களுக்கு வழங்காமல் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த புத்தக பண்டல்களை திருடி லோடு வேனில் ஏற்றினர். புத்தக திருட்டிற்கு ஓரிரு ஆசிரியர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனையறிந்த பொதுமக்கள் சிலர் அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன் கூறுகையில், 'புத்தகங்கள் திருட்டு குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்துள்ளேன். யார் எடுத்து சென்றனர் என்ற விபரங்கள் சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை பார்த்து வருகிறோம்,' என்றார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்கள் விபரங்களை ரகசியம் காத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை