வலிப்பு ஏற்பட்டு சிறுவன் பலி
மூணாறு ; தமிழகம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காஜாஅலாவுதீனின் ஒன்றரை வயது மகன் முகம்மதுரகமத்துல்லா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தான். மூணாறில் காஜாஅலாவுதீன் குடும்பத்தின ருடன் தங்கி ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்து வந்தார். அவரது மகன் முகம்மதுரகமத்துல்லா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென வலிப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் சிறுவன் இறந்தான். மூணாறு போலீசார் விசாரிக் கின்றனர்.