உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மொக்கப்பாண்டி 30. மனைவி லீலாவதி 25. இவர்களது மகன் இளமாறன் 3. நேற்று வீட்டில் மின்மோட்டாரை இயக்கி குடிநீர் பிடித்துக்கொண்டிருந்தனர். மின் ஒயரை இளமாறன் மிதித்துள்ளார். ஒயரில் மின் கசிவினால் மின்சாரம் தாக்கியதில் இளமாறன் மயங்கி விழுந்தார். தேவதானப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை