உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு டூ திருச்செந்துாருக்கு சைக்கிளில் சென்ற சகோதரர்கள்

மூணாறு டூ திருச்செந்துாருக்கு சைக்கிளில் சென்ற சகோதரர்கள்

மூணாறு: மூணாறைச் சேர்ந்த சகோதரர்கள் திருச்செந்தூரில் முருகனை தரிசிக்க எட்டாம் ஆண்டாக சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.மூணாறைச் சேர்ந்த சகோதர்கள் குமரேஷ் 47, வெங்கடேஷ் 45. இவர்கள் ஹோம்மேட் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இருவரும் மாலையிட்டு விரதம் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக சைக்கிளில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். எட்டாம் ஆண்டாக நேற்று காலை புறப்பட்டனர். மூணாறில் இருந்து போடி, தேனி, உசிலம்பட்டி, திருமங்கலம், காரியா பட்டி வழியாக தூத்துக்குடி பைபாஸ்சில் இணைந்து 310 கி. மீ., தூரம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர். மூன்று நாட்கள் பயணித்து நாளை கோயிலை சென்றடைகின்றனர். மூணாறில் இருந்து திருச்செந்தூருக்கு குமரேஷ், வெங்கடேஷ் ஆகியோர் மட்டும் சைக்கிளில் செல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ