மேலும் செய்திகள்
புனித யாத்திரை நிதி பெற அழைப்பு
12-Jul-2025
தேனி: தமிழக அரசு சார்பில் புத்த, சமண, சீக்கிய மதங்கள் தொடர்பான தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஜூலை 1க்குள் பின் செல்பவர்களுக்கு நேரடியாக மானியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். புனித பயண மானியம் பெற விண்ணப்ப படிவங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். அல்லது www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 2025 நவ.30க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலகமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
12-Jul-2025