உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கட்டடம் சேதம்: வீட்டில் செயல்படும் அங்கன்வாடி

கட்டடம் சேதம்: வீட்டில் செயல்படும் அங்கன்வாடி

போடி: போடி அருகே சிலமலை மணியம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள அங்கன்வாடி கட்டடம் சேதம் அடைந்ததால் தனி நபர் வீட்டில் செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.சிலமலை ஊராட்சி மணியம்பட்டி ரோட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இங்கு 30 குழந்தைகள் படித்தனர். பல ஆண்டுகளாக கட்டடம் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளது. 2 ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கவில்லை. அங்கன்வாடி முன் சாக்கடை கழிவுநீர் தேங்கி, குப்பை கொட்டி வருகின்றனர். மழைக் காலங்களில் கட்டடத்திற்குள் மழை நீர் செல்வதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.இதனால் அங்கன்வாடி கட்டடத்தை பயன்படுத்த முடியாமல் தற்போது சிலமலை 7வது வார்டு கருப்பசாமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தூரம் என்பதால் குழந்தைகளை பெற்றோர் அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதனால் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.அங்கன்வாடி கட்டடம் முழுவதும் சேதம் ஏற்படும் முன் பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை