உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது பஸ் மோதல் நேர்காணலுக்கு சென்றவர் பலி

டூவீலர் மீது பஸ் மோதல் நேர்காணலுக்கு சென்றவர் பலி

மூணாறு: கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே வாளரா பகுதியில் டூவீலர் மீது கேரள அரசு பஸ் மோதி நேர்காணலில் பங்கேற்க சென்றவர் இறந்தார். இடுக்கி மாவட்டம் வாளரா பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் 24. இவர், பணி தொடர்பாக எர்ணாகுளத்தில் நேற்று நடந்த நேர்காணலில் பங்கேற்க டூவீலரில் சென்றார். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாளரா பகுதியில் சென்றபோது எதிரே வந்த கேரள அரசு பஸ், டூவீலர் மீது பலமாக மோதியது. அதில் பலத்த காயமடைந்த அரவிந்தை அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியில் இறந்தார். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !