உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் டிரைவர் தற்கொலை

பஸ் டிரைவர் தற்கொலை

போடி: போடி அருகே சுந்தரராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 42. பழனி அரசு போக்குவரத்து டிப்போவில்டிரைவராக வேலை செய்தார். இவரது மனைவி சுமதி. இருவரும் 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 17 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் சுமதி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுமதி 20 நாட்களுக்கு முன்பு கணவர் மணிகண்டனிடம் விவகாரத்து கேட்டு தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டனின் தந்தை சுருளிவேல் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ