உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கம்பத்தில் பிஸினஸ் போரம் புதிய கிளை துவக்கம்

 கம்பத்தில் பிஸினஸ் போரம் புதிய கிளை துவக்கம்

தேனி: தேனி பிஸினஸ் போரத்தின் புதிய கிளை கம்பத்தில் 35 உறுப்பினர்களோடு நேற்று துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இயக்குனர் முத்துசெந்தில்குமார் தலைமை வகித்தார். மண்டல இயக்குநர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கம்பம் கிளைத் தலைவர் டாக்டர் தியாகராஜன், செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் டாக்டர் செல்லதுரை சுப்புராஜ், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளராக விக்னேஷ்ராஜா, கூட்ட ஒருங்கிணைப்பாளராக சுல்தான் சையது இப்ராஹிம் ஆகியோர் பொறுப்பு ஏற்றனர். கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், கம்பம் பி.எல்.பி., நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் பிஸினஸ் போரம் குறித்து பேசினர். மண்டல இயக்குனர் வரவேற்றார். இயக்குனர் பேசியதாவது: 2021ல் 25 உறுப்பினர்களை வைத்து துவக்கப்பட்ட தேனி பிஸினஸ் போரம் இன்று 98 உறுப்பினர்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கம்பம் கிளையின் வளர்ச்சி பல மடங்கு பெருகும். அதன் வளர்ச்சிக்காக தேவையான ஒத்துழைப்பை வழங்கும். உறுப்பினர்கள் தங்களின் வியாபாரத்தை போன்று போரத்தின் பிற உறுப்பினர்களின் வியாபார வளர்ச்சியை ஊக்குவிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒருங்கிணைந்த நாம் நினைத்த வியாபார இலக்கு எளிதாக எட்ட முடியும் என்றார். தேனி பிஸினஸ் போரத்தின் தலைவர் விஜயகுமார், செயலாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேஷ்,முன்னாள் தலைவர்கள் ஜோதிடர் பாலகிருஷ்ணன், பிரதீப் செல்லதுரை, தேனி பிஸினஸ் போரத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை