| ADDED : நவ 26, 2025 03:46 AM
தேனி: அக்னிவீர் திட்டத்தில் பொதுப்பணி, கிளார்க், டிரேட்ஸ்மேன், ஆகிய பிரிவுகளில் ஆட்கள் சேர்ப்பு முகாம் உத்திரப்பிரதேசம், பரேலி ஜாட்ரெஜிமெண்டல் மைதானத்தில் டிச.,8 முதல் டிச., 16 வரை நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்களை சார்ந்தவர்களின் 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் 2004 அக்.,1 முதல் 2008 ஏப்.,1க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு கல்வித்தகுதி 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வேறுபடும். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்களை சார்ந்தவர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.