உரிமையாளரை கடித்த ஒட்டகம்
கூடலுார்: கூடலுாரைச் சேர்ந்தவர் அக்பர். இவர் ஓராண்டாக கூடலுார் அருகே அப்பாச்சி பண்ணையில் ஒட்டகம் வளர்த்து வருகிறார். அப்பாச்சி பண்ணையில் திராட்சைத் தோட்டத்தை பார்க்க கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்காக இப்பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் பல துவக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக ஒட்டகம் வளர்க்கப்பட்டு வருகிறது. நேற்று ஒட்டகத்திற்கு அக்பர் தீவனம் கொடுத்துக் கொண்டிருந்த போது இவர் வலது காலை கடித்தது. பலத்த காயமடைந்த இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.