உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அசல் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

 அசல் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

தேனி: நாளை நடக்க உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு எழுத வருபவர்கள், 'அசல் அடையாள அட்டைகள் கொண்டு வர வேண்டும்.' என, கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை (டிச.27ல்) நடக்கிறது. இத்தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. தேனியில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.சி., கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வினை எழுத 508 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 29 பாடப் பிரிவுகளில் தேர்வு நடக்கிறது. அனுமதி இல்லை கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேர்விற்கு வருபவர்கள் ஆதார், பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் ஆகிய ஆளறி சான்றுகளின் ஏதாவது ஒன்றின் அசல் சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம். இதனால் அதனை மறக்காமல் கொண்டு வர வேண்டும். அசல் அடையாள அட்டை இல்லை என்றால் தேர்வு எழுத அனுமதி இல்லை. கருப்பு பந்து முனை பேனா எடுத்து வர வேண்டும். காலை 9:00 மணி, மதியம் 2:30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி