கஞ்சா விற்றவர் கைது
தேனி : தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் பூதிப்புரம் மஞ்சிநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த பாண்டியராஜிடம் 24, விசாரித்தனர். அவர் 150 கிராம் கஞ்சாவை பழனிசெட்டிபட்டி பிரபாகரனிடம் வாங்கி விற்பதாக கூறினார். இருவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் பாண்டியராஜை கைது செய்தனர்.பிரபாகரனை தேடி வருகின்றனர்.