உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிலத்தகராறில் 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் 4 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : மேல்மங்கலத்தில் நிலத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு வேறு நபருக்கு விற்பனை செய்த பிரச்னையில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யதனர்.பெரியகுளம் அருகே மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி ஈஸ்வரி 45. அதே ஊர் மேல தெருவை சேர்ந்த எஸ்.கணேசனுக்கு தனது நிலத்தை விற்பதற்காக ரூ 4.50 லட்சம் அட்வான்ஸ் பெற்று, அந்த நிலத்தை வேறு நபருக்கு ஈஸ்வரி விற்பனை செய்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் எஸ்.கணேசன் தனது மகன் கார்த்திக் இருவரும் ஈஸ்வரியின் தாயார் ராமுத்தாயை அவதூறாக பேசி கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.ஈஸ்வரி புகாரில், ஜெயமங்கலம் போலீசார் கணேசன் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்தனர்.கணேசன் புகாரில் மேலதெருவை சேர்ந்த ஈஸ்வரி வயலை தன்னிடம் விற்பதற்காக ரூ.4.50 லட்சம் அட்வான்ஸ் வாங்கினார். தற்போது நிலத்தை வேறு நபருக்கு விற்பனை செய்தார். அட்வான்ஸ் பணத்தை கொடுக்காமல், ஈஸ்வரியும், அவரது மகன் பி.கணேசனும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.எஸ்.கணேசன் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் ஈஸ்வரி, பி.கணேசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை