மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் உட்பட 4பேர் மீது வழக்கு
தேனி: உத்தமபாளையம் கோகிலாபுரம் சின்னத்தெரு பார்த்திபன் 37. இவரது மனைவி சத்யா 32. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சத்யா பெற்றோர் வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி சத்யா குழந்தைகளின் உணவு, பால் வாங்க செலவிற்கு பணம் கேட்டார்.அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கணவர் மனைவியை கைகளால் தாக்கினார். அப்போது கணவருடன் இருந்த மாமியார் சுப்புலட்சுமி, கணவரின் உறவினர்கள் பழனியம்மாள், மகேஸ்வரி உள்ளிட்ட நால்வர் இணைந்து, சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சத்யா தேனி மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெற்றார். புகாரில், உத்தமபாளையம் எஸ்.ஐ, இளங்கோவன் சத்யாவின் கணவர், மாமியார் உட்பட நால்வர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.