கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு :ஒருவர் கைது
தேனி: பெரியகுளம் வடகரை வீரபத்திர கோயில் தெருவை சேர்ந்தவர் வீரமணி 43. புகைப்பட செய்தியாளராக உள்ளார். இவர் நேற்று முன் தினம் போடி குலாலர் பாளையத்தைச் சேர்ந்த உறவினர் மணிமாறனை பார்க்க சென்றுள்ளார். அப்போது போடி பழைய ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த வினோத்பாபு என்பவர், வீரமணியை தகாத வார்த்தியால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்.போடி பழைய ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்தவர் வினோத் பாபு 36. இவர் நிருபராக பணிபுரிந்து வருவதாகவும், போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த மணிமாறன் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்ததை செய்தி வெளியிட்டுள்ளார்.இதனை மனதில் கொண்டு மணிமாறன் 46, பெரியகுளம் வடகரை வீரமணி 43, இருவரும் சேர்ந்து வினோத் பாபுவை தகாத வார்த்தியால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். அதன் பின் வீட்டிற்குள் நுழைந்து வினோத் பாபுவின் மனைவியை தகாத வார்த்தையால் பேசி, 'உனது கணவரை கொலை செய்யாமல் விட மாட்டோம். செய்தி வெளியிட்டதற்கு பணம் தர வேண்டும்,' என மிரட்டியதாக வினோத்பாபு போலீசில் புகார் செய்துள்ளார்.வீரமணி புகாரில் வினோத்பாபு மீதும், வினோத்பாபு புகாரில் மணிமாறனை போடி டவுன் போலீசார் கைது செய்தனர்.வீரமணியை தேடி வருகின்றனர்.